Pages

Saturday, August 2, 2014

ஸ்டீவ் ஜாப்ஸ் வரலாறு

தனியொரு மனிதனின் மரணம் உலக மக்கள் அனைவருக்கும் துக்கமாக மாறுகிறது என்றால்அந்த மனிதரால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பயன் அடைந்திருந்தாலொழிய அது சாத்தியமில்லை. இந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைவரும்அவரை முழுமையாகப் புரிந்திருந்தாலும் புரிந்திராவிட்டாலும்அவரது மரணத்தால் வருத்தமடைந்ததைக் கடந்த இரு நாள்களில் காண முடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஆறு மாதத்திலேயே இந்தப் படிப்பு பயன்தராது என்று கல்லூரியைவிட்டு வெளியேறியவர். அவர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததில்லை. ஆனால்மற்றவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைசாதாரணமானஅறிவியல் பரிச்சயம் இல்லாதவரும் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தும்படி செய்தவர். தொழில்நுட்பத்துக்குள் அறிவியலை வசீகரத்துடன் நுழையச் செய்தவர்.

இவருக்கு இணையாகச் சந்தையில் இருந்த நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை இதே மறுஆக்கம் செய்துகொண்டிருந்தன. ஆனாலும்ஜாப்ஸ் அறிமுகம் செய்தவை நுகர்வோருக்கு எளிமையாக இருந்ததால்மற்றவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதனால்தான் உலகம் இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது.

இவர் அறிமுகப்படுத்திய ஐ-பாட் வாங்குவதற்கு முந்நாள் இரவே வந்து படுத்துக்கிடந்தனர் வாடிக்கையாளர்கள். தொடுதிரை வசதியுடன் அடுத்து இவர் அறிமுகம் செய்த ஐ-போன் வாங்குவதற்கும் இதேபோன்று வரிசையில் நின்று காத்திருந்தார்கள். கணினியை கையளவுக்கு மாற்றிஇவர் ஐ-பேட் அறிமுகம் செய்தபோதும் இவரது புதுமைக்கு வரவேற்பு இருந்தது.
இவர் இயற்கை எய்திய அதே நாளில் இந்தியாவிலும் ஆகாஷ் என்கின்ற ஐ-பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,750மட்டுமே. ஆனால்இதன் பயன்பாட்டு எல்லை குறுகியது. எனினும்,ஊரகப் பகுதிகளை உலகத்தோடு இணைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் ஆதாரச் சுருதியாக இருந்தவர் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் "தாரக மந்திரம்என்ன தெரியுமா? "மாத்தி யோசி' (பட்ண்ய்ந் ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற்) என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை.

"மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்ததுஎன்று டிவிட்டரில் பேசப்படுகிறது. ஐ-சேட்  என்று சோகத்தைத் தலைப்பிடுகிறது ஓர் ஆங்கில நாளேடு. ஐ-போன் தொடுதிரையை நோக்கி தேவதூதனின் விரல் நீளுவதாக ஒரு கார்ட்டூன்இறையழைப்பைப் பேசுகிறது. கடந்த இரு நாள்களாக தகவல் தொழில்நுட்ப உலகில் ஜாப்ஸ் பற்றிய பேச்சு ஓய்ந்தபாடில்லை. அதுதான் அவரது பெருமை.

இவரது புதுமைகள் யாவுமே இவரது மனதில் கனவாக இருந்து உருவம் பெற்றவைதான். ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக நேரிட்டபோதும்என்னிடம் ஐந்து பெரும் புதுமைப் படைப்புகள் இருக்கின்றன என்று தன்னைப் பேட்டி கண்ட நிருபரிடம் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது என்றால்அவரது கனவுகள் எந்த அளவுக்கு மனதுக்குள் இயல்வடிவம் கொண்டிருந்தன என்பதைக் காணலாம்.

வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொண்டவர். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர்தனியே நெக்ஸ்ட் என்ற கணினி நிறுவனத்தைத் தொடங்கினார். பிக்ஸல் என்ற சித்திரத் திரைப்படத் தயாரிப்புக்கு உதவும் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி,பின்னாளில் பிக்ஸல் நிறுவனத்தை வால்ட் டிஸ்ட்னி நிறுவனத்துக்குக் கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மிக அதிகமான பங்குகளைத் தனதாக்கிக் கொண்டவர் ஜாப்ஸ். மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்துசரிவில் இருந்த நிறுவனத்தை நிமிர்த்திக் காட்டியவர்.

கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2005-ம் ஆண்டு வரையிலும்கூடஆப்பிள் நிறுவனத்தின் பங்குவிலை 50டாலராகத்தான் இருந்தது. ஐ-பாட்ஐ-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய பங்கு மதிப்புகடந்த ஆகஸ்ட் மாதம் 364 டாலராக உயர்ந்தது என்பதுதான்இவரது தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி!

இவர் சம்பாதித்ததும் சாதித்ததும்போல நாளைய உலகில் இன்னொருவர் சாதிக்கக் கூடும். வெற்றியடையவும் கூடும். இவரைப்போலவே அடிமட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மிக உயரத்துக்கு வருவார். ஆனால்ஸ்டீவ் ஜாப்ஸ் மீது நமக்கு ஏற்படும் நெருக்கம் என்பது இந்திய மரபு ஞானத்தால் வந்த பிணைப்பு.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், "மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்'என்பதை உணர்ந்தவர். "நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவிய அதிமுக்கிய கருவிஎன்று அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

"அடுத்தவர் கருத்துகொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதேஉன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாகஉன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!'என்று மரணம் மிக அருகில் என்று தெரிந்த நிலையிலும் அவரால் குறிப்பிட முடிந்திருக்கிறது.

அவர் பெற்றிருந்த இந்திய மரபு ஞானம்தான் அவரது மிகப்பெரும் சொத்துஆற்றல்அறிவுஎல்லாமும். அவர் சார்ந்திருந்த புத்த மதம்தான் இந்த ஞானத்துக்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்லஞானி!


ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 241955- அக்டோபர் 5, 2011)ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமானபதக்கத்தை வென்றார்.
ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.[12] 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்தார்.[13]
ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் இசுட்டீவ் வோசினியாக் (Steve Wozniak), மார்க் மார்குலா (Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் ஆட்சிப் பேராயத்தாருடன் மோதி, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஃசிட்டு (NeXT) என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜொப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தாட். அங்கு முதன்மை செயலாட்சியராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார்.

தொடக்கக்கால வாழ்க்கை[

ஸ்டீவ் ஜொப்ஸ், திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழ மாணவர்களுக்குப் பிறந்தார். இவரின் பெற்றோர் சோஆன் சீப்லெ (Joanne Schieble), சிரியா நாட்டினரான அப்துல்ஃவட்டா சண்டாலி ஆகியோர். ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளக் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர். ஜொப்ஸ் தத்து எடுத்த சில மாதங்களிலேயே, அவருடைய பிறப்புப் பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர்; அவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. ஆனால் அப்பெண்குழந்தை தான் வளர்ந்த மங்கை ஆன பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்தாள்.
1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சு

கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. "அந்த உரையின் தொகுப்பு:" நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.

முதல் கதை :

புள்ளிகளை இணைப்பது: நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, "மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல்கம்ப்யூட்டர், "டைப்போகிராபி '(அச்சுக் கலை) கொண்டது.

2வது கதை :

லவ் அண்ட் லாஸ்: நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.

மூன்றாவது கதை:

இறப்பு: சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். " உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். "பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்'. இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.

Stve